டெல்லி: "என் மகனை மன்னிச்சுருங்க.. அவனோட உயிருக்காக உங்க கிட்ட பிச்சை கேட்கிறேன்" என்று நிர்பயா அம்மாவின் சேலையை பிடித்து கெஞ்சி கேட்டார் பாலியல் பலாத்கார கொடூரன் முகேஷின் தாயார்.
நிர்பயா கொலையாளிகள் நான்கு பேரையும் தூக்கிலிடும் உத்தரவை டெல்லி கோர்ட் பிறப்பித்ததைத் தொடர்ந்து இப்படி கண்ணீர் மல்க நிர்பயாவின் தாயாரிடம் கெஞ்சினார் முகேஷின் அம்மா. நிர்பயாவுக்கு ஏற்பட்ட கொடூர முடிவை யாரும் இன்னும் மறக்கவில்லை.
மனசில் ஈரம் உள்ள யாராலும் அதை மறக்க முடியாது. பெண்ணைப் பெற்ற ஒவ்வொரு மனசும், கலங்கிப் போன சம்பவம் அது. நம்ம மகளுக்கு நடந்தால் எப்படி பதறுவோமோ அப்படித்தான் ஒவ்வொரு மனசும் அன்று பதறியது.
அப்படிப்பட்டன ஈவு இரக்கமற்ற பாவச் செயலை செய்த அந்த நான்கு கொலையாளிகளுக்கும் அதாவது முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகியோரை தூக்கிலிட நேற்று டெல்லி கோர்ட் உத்தரவிட்டது. இதைக் கேட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தார் கோர்ட்டுக்கு வந்திருந்த நிர்பயாவின் தாயார்.