24 வயசு டிம்பிள்.. ஏமாந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள். நடந்தது என்ன.. நள்ளிரவில் சேலத்தில் பரபரப்பு

சேலம்: மொத்தம் 10-க்கும் மேற்பட்டஇளைஞர்களை டிம்பிள் என்ற இளம்பெண் ஏமாற்றி விட்டாராம்.. வேலைவாங்கி தருவதாக மோசடி செய்த இந்த பெண்ணை பாதிக்கப்பட்ட இளைஞர்கள் காரில் கடத்திவிட்டதாக, டிம்பிளின் தாய் தந்த புகாரால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.


தஞ்சையை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகள் டிம்பிள்.. 24 வயதாகிறது.. சென்னையில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் நிறைய பேரிடம், தனக்கு தெரிந்த ஒருவர் மூலம் தனியார் விமான நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பண மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.. சேலம், நாமக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த நிறைய இளைஞர்கள் லட்சக்கணக்கில் டிம்பிளிடம் பணம் தந்து ஏமாந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த இளைஞர்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை.. டிம்பிள் பணத்தையும் அவர்களுக்கு திருப்பி தரவில்லை.. தொடந்து டிம்பிளை ஏமாந்துபோன இளைஞர்கள் பணம் கேட்டு கொண்டே இருந்தனர். இதனால், நேற்று சேலம் இரும்பாலை பகுதியில் தனக்கு சொந்தக்காரர் இருப்பதாகவும், அங்கு வைத்து எல்லாருக்கும் பணத்தை செட்டில் செய்துவிடுவதாகவும் டிம்பிள் சொல்லி உள்ளார்.